அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்!

_87153308_thinkstockphotos-496030574

நம் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை அகற்ற ஒரு புதிய மருத்துவ சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அறுவை சிகிச்சையற்ற வலியற்ற ஒரு சிகிச்சை ஆகும்.

இந்த சிகிச்சைக்கு பி டி எல் வான்குவிஷ் எம் ஈ (BTL Vanquish ME) என்று பெயரிட்டுள்ளார்கள். எங்கு அதிகப்படியான கொழுப்பு உள்ளதோ அப்பகுதியில் சதையை 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பமாக்கி அதன் அடியில் இருக்கும் கொழுப்பை 46 டிகிரி வரையிலும் வெப்பமாக்கி இந்த சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். கடுமையான உடற்பயிற்சி செய்து கரைக்க வேண்டிய அதிகப்படியான கொழுப்பை எளிதில் இம்முறையில் எரித்து குணப்படுத்துகிறார்கள்.

இது வலியில்லாத ஒரு சிகிச்சை முறையாகும். இதற்கு அதிக நேரம் ஆகாது, சிகிச்சைக்குப் பின் கடைபிடிக்கவேண்டியவை என எதுவும் இல்லை. இந்த சிகிச்சையின் போது சதையில் லேசான கதகதப்பான உணர்வு ஏற்படுமே தவிர பயப்படும்படியான சூடு எதுவுமிருக்காது. நோயாளிகள் இதனை ரேடியேட்டர் சூட்டில் இருப்பது போல லேசான வெப்பம்தான் என்று சொல்லியுள்ளார்கள் என்றார் ஆய்னா கிளினிக்கைச் சேர்ந்த சரும சிகிச்சை நிபுணர் சிமல் சாய்ன்.

தங்கள் எடையை விட 20 சதவிகிதம் அதிகப்படியான எடை உள்ளவர்களுக்கு டைப் 2 சர்க்கரை வியாதி, பக்கவாதம், இதயம் மற்றும் கல்லீரல் மற்றும் மூட்டு வலி எலும்பு சம்மந்தப்பட்ட குறைபாடுகள் ஏற்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது என்கிறது இன்றைய மருத்துவ ஆய்வுகள். நாடளாவிய உலகளாவிய எண்ணிக்கையில் கிட்டத்த ஒரு பில்லியன் மக்கள் உடல் பருமன் பிரச்னையுடன் வாழ்கிறார்கள்.

அறுவை சிகிச்சையின்றி வலியின்றி இந்த மருத்துவமுறை எந்த பக்கவிளைவும் சதைக்கோ தோலுக்கோ ஏற்படுத்தாது என்று உறுதியளிக்கிறார் சாய்ன்.

இந்த சிகிச்சைமுறை உலகம் எங்கும் இருந்தாலும், இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு நிரந்தர தீர்வாகும். சிகிச்சை முடிந்த முன் சத்தான உணவும் தேவையான அளவு உடற்பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது.

Leave a Reply