பிரதமர் மோடியை யாராலும் வெல்ல முடியாது: நிதிஷ்குமார் புகழாரம்

பிரதமர் மோடியை யாராலும் வெல்ல முடியாது: நிதிஷ்குமார் புகழாரம்

பிரதமர் மோடியின் திடீர் ஆதரவாளராகி, பாஜகவின் உதவியால் மீண்டும் முதல்வராகியுள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ‘2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை யாராலும் வெல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நிதிஷ்குமார் மோடியை வெல்லக் கூடிய வலிமை இப்போதுள்ள எந்தத் தலைவருக்கும் இல்லை என்றும், நாடு முழுவதும் பினாமி சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் மோடியின் முயற்சியில் முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவது 3 மாதங்களுக்கு முன்பே தெரியும் என்று ராகுல் காந்தி கூறியது விசித்திரமானது என்று கூறிய நிதிஷ், தன்னைச் சந்திக்கும்போது ராகுல் இதுபற்றி கேட்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்ததை எதிர்த்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, காங்கிரஸ் கூட்டணியில் இணைந்த நிதிஷ், 3 ஆண்டுகளில் மோடியை இவ்வாறு புகழ்ந்து பேசியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply