ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது: சென்னை கலெக்டர்

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது: சென்னை கலெக்டர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான வேதா இல்லம், அவரது நினைவிடமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் சட்டரீதியான வாரிசுகள் நாங்கள் என்றும், எங்கள் அனுமதி இல்லாமல் வேதா இல்லத்தை நினைவிடமாக்க முடியாது என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அண்ணன் மகள் தீபா ஆகியோர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் கூறிய சென்னை கலெக்டர் அன்புசெல்வன், ‘ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லை. எனவே அவரது வேதா இல்லத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்க, நிலம் கையகப்படுத்தும் பணி மற்றும் நில அளவீடு பணிகள் 4 மாதங்களில் முடிவடையும்’ என்று கூறினார்.

மேலும் வேதா நிலையத்தில் சமீபத்திய வருமான வரித்துறை சோதனையில் இரு அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டதாகவும், அரசுடைமையாக்கும் ஆய்வின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் உடன் இருந்ததாகவும், சீலிடப்பட்ட அறைகள் திறக்கப்படவில்லை என்றும் கலெக்டர் அன்புசெல்வன் கூறியுள்ளார்.

Leave a Reply