ஜெயலலிதா விடுதலை. ஆட்டம் போட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கி அதிசயம்.

bailசொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை கொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவுடன் வீராவேசமாக அறிக்கை கொடுத்த தமிழக எல்.போர்டு அரசியல்வாதிகள் அவருக்கு ஜாமீன் கிடைத்தது குறித்த தகவல் தெரிந்தவுடன் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாகிவிட்டனர். இதுகுறித்து ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களில் சிலவற்றை இங்கு தொகுத்து அளித்துள்ளோம்.

தினந்தோறும் தனக்குத்தானே கேள்வி கேட்டு பதில் சொல்லும் கருணாநிதி இன்று முழுவதும் வீட்டைவிட்டு வெளியே வரவே இல்லை. செய்தியாளர்களுக்கும் பேட்டி எதுவும் தரவில்லை.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது என்று வீரமுழக்கமிட்ட மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மெளனத்தை மட்டும் பதிலாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டவுடன் குகையில் இருந்து வெளியே வந்த புலி போல வீராவேச அறிக்கை விட்ட விஜயகாந்த், மீண்டும் பூனையாக பதுங்கிவிட்டார். இவர் தற்போது எங்கே இருக்கின்றார் என்று பத்திரிகையாளர்கள் தேடி வருகின்றனர்.

பேரன் பேத்தி திருமணம் நெருங்குவதால் இந்த நேரத்தில் வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டாம் என குடும்பத்தினர்களின் அறிவுரைப்படி , சில நாட்கள் துள்ளிக்குதித்து கொண்டிருந்த மருத்துவரும் மெளனமாகி விட்டார்தினமும் ஒரு வெத்துவேட்டு அறிக்கை விட்டுக்கொண்டு நானு அரசியல்வாதிதான் என்று தனக்குத்தானே விளம்பரம் தேடிக்கொண்ட தமிழிசை தற்போது அரசியலில் இருக்கின்றாரா?அல்லது மீண்டும் டாக்டர் தொழிலுக்கே சென்றுவிட்டாரா என்று அவரது கட்சியினர்களே சந்தேகம் அடைந்துள்ளனர்.

ஜெயலலிதாவின் விடுதலையை தமிழகம் முழுவதும் தீபாவளி திருநாள் போல பொதுமக்களும் அதிமுக தொண்டர்களும் கொண்டாடி வரும் நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் மீண்டும் பதுங்க ஆரம்பத்த்துள்ளனர் என்பது மட்டும் முடிவாக தெரிகிறது.

Leave a Reply