வங்கிகளில் சேமிப்புக்கணக்கு வைத்திருப்பவர்கள் மினிமம் பேலன்ஸ் தொகையை வைத்திருக்காமல் நீண்ட நாட்கள் கணக்கை பராமரிக்காமல் இருந்தாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கும் வங்கிகளின் நடைமுறைக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
இனிவரும் காலங்களில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காக சேமிப்புக்கணக்கு வாடிக்கையாளர்களுக்கு எந்த வங்கிகளும் அபராதம் விதிக்கக்கூடாது என்றும் அதற்கு பதிலாக அவர்களுக்கு வழங்கிவரும் ஒருசில சேவைகளை நிறுத்திவிட்டு, அவரக்ள் குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்தவுடன் அந்த சேவைகளை தொடரலாம் என்றும் அறிவுறித்தியுள்ளது.
இந்த புதிய உத்தரவால் பல சேமிப்புக்கணக்கு வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். தற்போதே பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், பராமரிக்கப்படாத வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச இருப்புத்தொகை இல்லை என்றாலும், அபராதம் விதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.