உருது மொழியை 3வது மொழியாக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை. பிரகாஷ் ஜவடேகர்

உருது மொழியை 3வது மொழியாக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை. பிரகாஷ் ஜவடேகர்

prakash-javadekar_650x400_51463334561அரசுப் பள்ளிகளில் சேர்க்கை விண்ணப்பதில் 3வது மொழிப் பாடமாக உருது மொழியை குறிப்பிட வகை செய்ய வேண்டும் என தேசிய சிறுபான்மை மொழிகள் துறை ஆணையர் அக்தருல் வாஸி சில தினங்களுக்கு முன்பு வலியுறுத்தி இருந்த நிலையில் இன்று கேள்வி நேரத்தில் பதில் கூறிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உருது மொழியை பள்ளிகளில் கட்டாயமாக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ‘உருது மொழியை முன்னெடுத்து செல்லும் முயற்சியை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். மூன்று மொழிக் கொள்கை திட்டத்தின் முக்கிய நோக்கமானது, மொழி நல்லிணக்கத்தினையும், சமத்துவத்தையும் பள்ளி கல்விகளில் கொண்டு வருவதாகும்.

இது குறிப்பிட்ட சமுதாயத்தினருடன் தொடர்புடைய விவகாரம் அல்ல. மொழி உடன் தொடர்புடையது மட்டுமே. உருது மொழி ஆசிரியர்களின் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். கடந்த இரண்டு ஆண்டுகளில் உருது மொழி வளர்ச்சிக்காக தேசிய கவுன்சில் ரூ.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது” என்று கூறினார்.

Leave a Reply