குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரவு யாருக்கு? பிரதமரை சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரவு யாருக்கு? பிரதமரை சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

தமிழக முதல்வராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே இரண்டு முறை பாரத பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த நிலையில் இன்று மூன்றாவது முறையாக டெல்லியில் பிரதமரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று கூறினார்.

இந்த சந்திப்பின்போது நீட் உள்பட தமிழக பிரச்சனை தீர்க்க மத்திய அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளித்ததாக தமிழக முதல்வர் கூறினார்.

மேலும் குடியரசு தலைவர் தேர்தல் உள்பட எந்தவித அரசியல் பிரச்சனைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்ட முதல்வர், குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply