ரூ.1000 நோட்டுக்கள் அச்சடிப்பது உண்மையா?

ரூ.1000 நோட்டுக்கள் அச்சடிப்பது உண்மையா?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்திருந்த நிலையில் நேற்று மீண்டும் ரூ.1000 நோட்டுக்கள் வெளிவரவுள்ளதாகவும், இரண்டு அச்சகங்களில் ரூ.1000 நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன

ஆனால் பொருளாதார செயலாளர் சுபாஷ் சந்திரா கார்ஹ் அவர்கள் இதுகுறித்து சற்றுமுன்னர் அளித்த பேட்டியில் மீண்டும் ரூ.1000 நோட்டை புழக்கத்தில் விடும் ஆலோசனை இல்லை என்றும், ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட தகவலில் உண்மை இல்லை என்றும் கூறினார்.

இதில் இருந்து ரூ.1000 நோட்டுக்கள் இனி வெளிவர வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும் ரூ.2000 நோட்டு விரைவில் மதிப்பிழக்குமா? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருப்பது உண்மைதான்

Leave a Reply