வருமான வரித்துறை ரெய்டு நடந்தது உண்மையா? விஜய்சேதுபதி விளக்கம்
விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. இதில் விஜய்சேதுபதி, த்ரிஷா, உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் விஜய்சேதுபதி வீட்டில் நேற்று வருமான வரித்துறை ரெய்டு நடந்ததாக வெளிவந்த செய்தி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு விஜய்சேதுபதி பதிலளித்ததாவது:
‘எங்கள் வீட்டில் நடந்தது சோதனை அல்ல. வெறும் ஆய்வு தான். சில ஆண்டுகளாக எனக்கு வரி விவரங்களை பார்த்துக்கொண்ட ஆடிட்டரால் ஏற்பட்ட சின்ன குழப்பம். அந்த குழப்பத்தை போக்கிக்கொள்ள வருமான வரித்துறையினர் வந்தனர். குழப்பம் தீர்ந்ததால் சென்றுவிட்டனர். நான் குடும்பத்துடன் லக்னோ சென்றுவிட்டு நேற்று மதியம் தான் திரும்பினோம். வருமானத்தை நேர்மையாக கணக்கு காட்டி வரிகளை சரியாக செலுத்தி வருகிறேன் எ