சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிம்மதியை கொடுத்த அறிவிப்பு

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிம்மதியை கொடுத்த அறிவிப்பு

சிபிஎஸ்இ சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் மற்றும் 12-ம் வகுப்பு பொருளாதாரத் தேர்வு வினாத்தாள் ஆகியவை சமூக வலைத்தளங்களில் முன்கூட்டியே லீக் ஆனதாக தகவல்கள் பரவின

இதனால், சிபிஎஸ்இ அமைப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது மட்டுமின்றி இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் லீக் ஆன இரண்டு பாடங்களுக்கும் மறு தேர்வு வைக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

இதன்படி சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதார பாடப்பிரிவுக்கான பொதுத்தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10-ம் வகுப்புக்கு மறுதேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி 10-ம் வகுப்பு கணித தேர்வுக்கு மறுதேர்வு நடத்தப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் செயலர் அனில் ஸ்வரூப் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்

Leave a Reply