சம்பளத்திற்கு பதிலாக பெண்கள். அதிர்ச்சி தகவல்
எதிரி நாடுகளிடம் இருந்து சொந்த நாட்டு மக்களை காப்பாற்றவே ராணுவம் என்று அனைத்து நாடுகளிலும் இருந்து வரும் நிலையில் சூடான் நாட்டில் மட்டும் ராணுவ வீரர்களை சொந்த நாட்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொள்ள அந்நாட்டு அரசே அனுமதி வழங்கியுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டுமுதல் சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறாது. ஆளும் அரசு தனது பதவியை காப்பாற்றி கொள்ள புரட்சி செய்யும் குடிமக்களை ராணுவத்தினர் உதவியுடன் அடக்கி வருகிறது. இந்நிலையில் ராணுவ வீரர்களுக்கு தற்போது சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் அரசு இருப்பதால், சம்பளத்திற்கு பதிலாக பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய அந்நாட்டு அரசே ராணுவ வீரர்களை அனுமதித்துள்ளதாக ஐ.நா.வுக்கான மனித உரிமைகள் ஆணையம் அதிர்ச்சி தகவலை தனது விசாரணை அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: ”அரசுக்கு எதிராக செயல்படும் குடிமக்களை ராணுவம் துப்பாக்கியால் சுட்டும், மரங்களில் கட்டி தொங்கவிட்டும், விஷவாயு அறைகளில் அடைத்தும் கொடூரமாக கொன்றுள்ளனர். இந்த கொடூர செயலின் உச்சக்கட்டம், கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நிகழ்ந்துள்ளது.
அரசுக்கு எதிராக செயல்படும் குடிமக்களை அடக்க ராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டனர். ராணுவ வீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு பதிலாக அந்நாட்டு அரசாங்கம் கொடூரமான அனுமதியை அளித்துள்ளது. அதாவது, ஊதியத்திற்கு பதிலாக ராணுவ வீரர்கள் அந்நாட்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துகொள்ளலாம் என அனுமதி வழங்கி உள்ளது.
தெற்கு சூடானில் உள்ள 10 மாகாணங்களில் யுனைட்டி மாகாணமும் ஒன்றாகும். இந்த ஒரு மாகாணத்தில் மட்டும் 1,300 பெண்கள் ராணுவ வீரர்களின் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளனர். ஏனைய மாகாணங்களையும் சேர்த்தால், இந்த புள்ளிவிபரம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது” இவ்வாறு ஐ.நா.வுக்கான மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.