ரூ. 2000 வரையிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு சேவை வரி கிடையாது. மத்திய அரசு அறிவிப்பு
ரொக்க பணப்பரிவர்த்தனைகளை குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதத்தில் ரூ. 2000 வரையிலான கிரடிட் மற்றுக் டெபிட் கார்டு பயன்பாட்டுக்கு சேவை வரி கிடையாது என்று மத்திய அரசு சற்று முன் அதிரடியாக அறிவித்துள்ளது.
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றால் நாடு முழுவதும் ரொக்கமற்ற மின்னணு பணப்பரிவர்த்தனைகளை பொதுமக்களுக்கு பழக்க வேண்டும் என்பதே தற்போதைய மத்திய அரசின் உண்மையான நோக்கமாக உள்ளது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஒருசில சலுகை வழங்கி ஊக்குவிப்பது ஆகியவற்றில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைக்கு கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது அவற்றுக்கு சேவை வரி விதிக்கப்படுவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை கருத்தில் கொண்டு ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனைகள் ,ரூபாய் 2000 வரை இருந்தால் அவற்றுக்கு சேவை வரி விதிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுவரை கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 15 சதவித சேவை வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.2000 வரை சேவை வரி இல்லை என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.