தமிழர்கள் பகுதியில் ராணுவத்தினரை விலக்கிக் கொள்ளும் எண்ணம் இல்லை. மைத்ரிபாலா ஸ்ரீசேனா

maithreepala-sirisenaஇலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டால் மீண்டும் விடுதலைப்புலிகள் தலையெடுக்க அனுமதிக்க மாட்டேன் என்றும், தமிழர்கள் பகுதியில் ராணுவம் விலக்கிக்கொள்ளப்படாது என்றும் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடும் மைத்ரிபாலா ஸ்ரீசேனா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கை அதிபர் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்நிலையில் நேற்று மாலை எதிர்க்கட்சி கூட்டணியின் பொது வேட்பாளர் மைத்ரிபாலா ஸ்ரீசேனா பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இதுவரை எந்த உடன்படிக்கையிலும் நான் கையெழுத்திடவில்லை. தமிழர்கள் உள்பட யாருடைய தனிநாடு கோரிக்கைகளும் ஏற்கப்பட மாட்டாது. இந்த நாடு பிரிக்கப்படுவதை ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன். மேலும் இலங்கையில் விடுதலைப்புலிகள் மீண்டும் தலையெடுப்பதை அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை.

எனது தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களை பார்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் என்னை ஆதரித்துள்ளது. சிறுபான்மையினர் பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலிப்பதைவிட, அவற்றை எதிர்கொள்ள அரசியல் சட்டத் திருத்தங்கள், தேர்தல் முறை சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று எனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளேன்.

இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள  தமிழர்கள் வாழும் இடங்களில் ராணுவத்தினரை விலக்கிக் கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், நாட்டின் பாதுகாப்பு எனது முக்கியப் பொறுப்பாக இருக்கும்

Leave a Reply