பாகிஸ்தானில் ஒரு பயங்கரவாதி கூட இல்லை. ராணுவ செய்தி தொடர்பாளர் பேட்டி

பாகிஸ்தானில் ஒரு பயங்கரவாதி கூட இல்லை. ராணுவ செய்தி தொடர்பாளர் பேட்டி

9பாகிஸ்தான் நாட்டில் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் இருப்பதும், அவர்களால் உள்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உலகம் முழுவதும் அறிந்த உண்மை. இந்நிலையில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியாக ”பாகிஸ்தான் நாட்டில் ஒரு பயங்கரவாதி கூட இல்லை என்றும் அனைவரையும் ஒழித்து விட்டோம் என்றும் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிம் சலீம் தேஜ்வா பேட்டி அளித்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை குறி வைத்து ராணுவம் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தியதில், 3,500–க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இப்போது நாட்டில் பயங்கரவாதிகளே இல்லை. அனைவரையும் ஒழித்து விட்டோம்’ என்று தெரிவித்தார்.

மேலும், இந்த பயங்கரவாத தடுப்பு வேட்டையில் 337 வீரர்கள் பலியாகி உள்ளனர். 2,272 வீரர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உளவுத்துறையினர் நாடு முழுவதும் பணியாற்றி பயங்கரவாதிகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். 2,600 கி.மீ. தூரமுள்ள ஆப்கானிஸ்தான் எல்லையை கண்காணிப்பதும், 30 லட்சம் ஆப்கான் அகதிகளை பராமரிப்பதும் தான் சவாலான பணிகளாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Leave a Reply