காவிரி பிரச்சனையில் அரசியல் ஆதாயம்: ஒற்றுமை இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டம் அறிவித்தபோதிலும், அந்த போராட்டத்தில் ஒரு ஒற்றுமை இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக, கமல் கட்சி, பாஜக உள்பட ஒருசில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. திமுக கிட்டத்தட்ட தனது கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளை மட்டும் அழைத்து ஒருசில தீர்மானங்களை இயற்றி ஏப்ரல் 5ஆம் தேதி முழு அடைப்பு என அறிவித்துள்ளது.
அதேபோல் இன்று வணிகர்கள் கடையடைப்பை அடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதிமுக தனியாக ஒரு நாளில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. வணிகர் சங்கங்களின் இன்னொரு பிரிவினர் 11ஆம் கடையடைப்பு என அறிவித்துள்ளனர். எனவே ஒவ்வொரு கட்சியும் அமைப்பும் காவிரி பிரச்சனையில் விளம்பரம் தேடவே முயற்சிப்பதாகவும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்ததாததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்