வெற்றி பெற்றால்தான் திருமணம். உபியில் ஒரு விநோத வேட்பாளர்

வெற்றி பெற்றால்தான் திருமணம். உபியில் ஒரு விநோத வேட்பாளர்

உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாஜக, சமாஜ்வாடி ஜனதா கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் போட்டியிட்டு வருகின்றன.

இந்த நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான அனுப்பிரியா படேல் தலைமையிலான அப்னா தளம் என்ற கட்சியின் சார்பில் கொசைன்கன்ச் தொகுதியில் 46 வயது இந்திரபிரதா என்பவர் போட்டியிடுகிறார்.

இவர் மாணவர் காலத்தில் இருந்தே தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். இவருக்கு ஒரு பிடிவாதமான கொள்கை உண்டாம். அதாவது தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் எம்.எல்.ஏவாக நுழைந்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற கொள்கையுடன் உள்ளாராம்.

கடந்த 2007, 2012 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்த இவர் இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடுகின்றார். இந்த தேர்தலிலாவது வெற்றி பெற்று திருமணம் முடிப்பாரா என்று அவருடைய பெற்றோர்கள் கலக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply