சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது. சித்தராமையா

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது. சித்தராமையா

siddharamaiahகாவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கை நேற்று விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் ‘கர்நாடக அரசு தமிழகத்துக்கு மேலும் இரு தினங்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

ஆனால் நீர்ப்பாசனத்தை விட குடிநீரின் தேவை மேலானதால், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த முடியாது என்று நேற்று செய்தியாளர்களிடம் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய நீர்வளத் துறை பாசனத்தைவிட, குடிநீருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளது. கர்நாடகாவில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நகலை முழுமையாகப் படிக்கவில்லை. தீர்ப்பு குறித்த விவரங்களைப் படித்து தெரிந்துகொண்ட பின்னரே கர்நாடக அரசின் முடிவு அறிவிக்கப்படும். கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்

இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனை செய்ய இன்று அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது. கடந்த முறை அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாத பாஜக இம்முறை கலந்து கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

Leave a Reply