சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழக காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் டி.ஜி.பி.க்கள் முத்துக்கருப்பன், சேகர், அசோக்குமார், அனுப்ஜெய்ஸ்வால், ஏ.டி.ஜி.பி. சஞ்சய் அரோரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவுக்கு தலைமை தாங்கி பரிசுகள் வழங்கிய டிஜிபி ராமானுஜம், சிறப்புரையாற்றினார். அதில் “மக்களுக்கு எதிராக துப்பாக்கிகளை போலீஸார் பயன்படுத்தக் கூடாது” எனஅறிவுறுத்தினார்.
வழக்குகளில் போலீஸார் அறிவுபூர்வமான விசாரணையை மட்டுமே முதலில் மேற்கொள்ள வேண்டும். திறமையான விசாரணையில்தான் போலீஸார் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டுமே அன்றி மக்களுக்கு எதிராக துப்பாக்கிகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. ஆனால் ரௌடிகளுக்கு எதிராகவும், தீவிரவாத சூழலிலும் தற்காப்புக்காகவும் துப்பாக்கிகளை போலீஸார் தாராளமாக பயன்படுத்தலாம்.
மேலும் மௌலிவாக்கம் கட்டட விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தமிழக பேரிடர் மீட்புக் குழு மற்றும் கமாண்டோ படையினர் பணி பாராட்டத்தக்கது என்றும் இதுபோன்ற கட்டட விபத்துகளில் சிறப்பாக செயல்பட பேரிடர் மீட்பு குழு, கமாண்டோ படையினருக்கு நவீன கருவிகள், பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் ராமானுஜம் கூறினார்.