2013 – அமைதிக்கான நோபல் பரிசு

நெதர்லாந்தில் உள்ள ஹாக் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுவது ரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பு (ஓபிசிடபிள்யூ). 1997ம் ஆண்டில் இருந்து இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் 190 நாடுகள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளன. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவற்றை ஒழித்து கட்டுவதுதான் இந்த அமைப்பின் பணியாக உள்ளது.

சிரியாவில் ஐ.நா. தீர்மானத்தின்படி ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு பணியை மேற்பார்வையிட்டு வரும் அமைப்பும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட சிறுமி யூசுப் சை மலாலாவுக்கு கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக அமைதி பணிக்காக பாடுபட்டு வரும் ஓபிசிடபிள்யூ அமைப்புக்கு வழங்குவது என்று நோபல் பரிசு தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.

Leave a Reply