பணக்காரர்களுக்கு பர்த்டே கேக், ஏழைகளுக்கு லத்திசார்ஜா?

சமூக ஆர்வலர்கள் ஆவேசமாக கருத்து 

பணக்காரர்கள் வீடுகளைத் தேடி அவர்களுக்கு பர்த்டே கேக் கொடுக்கும் காவல்துறையினர் ஏழை பெண்கள் என்றால் லத்தியால் அடித்து கொடுமைப்படுத்துவதா? என சமூக ஆர்வலர்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளனர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா என்ற பகுதியில் ரேஷன் அரிசி வாங்க வரிசையில் நின்ற இரண்டு பெண்களை அந்த பகுதி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் லத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார்

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பணக்காரர்கள் என்றால் அவர்கள் வீடு தேடி சென்று அவர்கள் வீட்டுக் குழந்தைகளின் பர்த்டேக்கு கொடுக்கும் போலீசார், ஏழைப்பெண்கள் ரேஷன் அரிசி வாங்க வரிசையில் நிற்கும்போது லத்தியால் அடிப்பதா? என சமூக வலைதள பயனாளர்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்தனர். இதனை அடுத்து இரண்டு பெண்களை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக உத்திரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது

Leave a Reply