மூடப்பட்ட நோக்கியா ஆலைக்கு புத்துயிர். பாராளுமன்றத்தில் மோடி தகவல்.

nokiaசென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா ஆலை சமீபத்தில் மூடப்பட்டது. இந்த ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பாரத பிரதமர் மோடி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கப்பட்ட நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஒருசில காரணங்களால் கடந்த நவம்பர் 1ஆம் தேதி மூடப்பட்டது. இதனால், இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த சுமார் 7 ஆயிரம் ஊழியர்களும், மறைமுகமாக ஆயிரக்கணக்கான ஊழியர்களும் வேலையிழந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசும்போது”நோக்கியா ஆலை மூடப்பட்டதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் காரணம் என்றும் ஆனால், தற்போது மீண்டும் நோக்கியா ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு காரணமாக வேலையிழந்த நோக்கியா ஊழியர்கள் மீண்டும் இந்த ஆலை செயல்பாடுக்கு வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply