இன்று பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு “NON-VEG”. அப்படிப்பட்ட புலால் (NON-VEG) உணவு சாப்பிடுவது பாவமா? அப்படி அதை சாப்பிடுவதால் நம் வாழ்கையில் ஏதேனும் துன்பம் ஏற்படுமா? செடி, கொடி போன்ற தாவரங்களுக்கும் உயிர் உண்டுதானே அதை சாப்பிடுவதும் பாவம்தானே என்ற கேட்விகள் ஆயிரம் இருக்கையில், உண்மை ஆன்மீக (திருவடி பூஜை + புண்ணியம்) முறையில் இதற்கான விளக்கம் இதோ:
சத்தியமாக சொல்கிறோம் புலால் (NON-VEG) உணவு பாவம்தான். அது கருவில் இருக்கும் குழந்தைக்கும் பொருந்தும். அது ஓர் வலியுள்ள உயிரினத்தை துடிக்கத்துடிக்க கொன்று அதிலிருந்து வெட்டி எடுத்து சமைக்கப்பட்ட உணவு என்பதால், அந்த உயிர் பிரியும்பொழுது எவ்வளவு துடித்ததோ அதே வலியை அதை கொன்றவர், அதை சமைத்தவர், அதை உண்பவர் என அனைவருக்கும் ஏதோ ஒரு பிறவியில் கொடுத்துவிடும், வலி என்ற உணர்வை படைத்த அந்த ஆதிசக்தி.
தாவரமும் உயிரினம்தானே அதை உண்பதால் பாவம் இல்லையா? தாவரம் என்பது ஓரறிவு உயிரினம். அதற்க்கு தொடு உணர்வு மட்டும்தான். வலி கிடையாது. உதாரணத்திற்கு நம் உடம்பில் உள்ள முடி மற்றும் நகம் போன்று. வெட்டுவது உணரப்படும் ஆனால் வலி கிடையாது. ஆடு, கோழி போன்ற உயிரினத்தை வெட்டுதல் என்பது நம் உடம்பில் உள்ள கை கால் மற்றும் கழுத்தை வெட்டுவது போன்று. தொடு உணர்வும் உண்டு; வலி உணர்வும் உண்டு;
மேற்கண்ட அனைத்தும் உண்மைக் கடவுளை (திருவடி) வணங்கி பெறப்பட்டதாகும். இதைப் படித்து நன்கு உணர்ந்தவர்கள், இனி சைவத்திற்கு மாறவிரும்பினால்.. அவர்கள், உண்மைக் கடவுளை வணங்கும் முறையான திருவடி பூஜை செய்து- மிக முக்கிய வேண்டுதலான “ அடியேன் நான், இனி புலால் உண்ணக்கூடாது” அல்லது “அடியேன் நான் புண்ணியவான் ஆகவேண்டும்” என்று வேண்டி வந்தாலே போதும். இயற்கையின் இயக்கம் மாறி இனி நீங்கள் சைவமாவது சத்தியமே.
நன்றி.
“ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி”