ஆரம்பிக்கின்றது வடகிழக்கு பருவமழை: கொட்டப்போகுது கனமழை!

வடகிழக்கு பருவமழை நாளை முதல் ஆரம்பமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வடகிழக்கு பருவ மழையால் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

வடகிழக்கு பருவமழையால் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்.

அக்டோபர் 27-ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் கோவை, சேலம், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த நான்கு நாட்களுக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.