உலகின் எந்த மூலையையும் தாக்கும் வடகொரியாவின் புதிய ஏவுகணை
அமெரிக்கா உள்பட பல உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டும், அந்நாடு அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனையை நிறுத்தவில்லை.
இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை மூலம் உலகின் எந்த மூலையில் உள்ள நாட்டையும் தாக்கலாம்.
வடகொரியாவின் Panghyon என்றா நகரின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளதாக, அண்டை நாடான தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், வடகொரியாவின் தாக்குதலை எந்த நிலையிலும் சமாளிப்பதற்கு, தயாராக இருப்பதாக தென்கொரியா அறிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்த உள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளள அந்நாட்டின் பிரதமர் சின்ஷோ அபே, உலக நாடுகள் பலமுறை எச்சரிக்கை செய்தும், அதை மீறி வடகொரியா ஏவுகணை சோதனை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.