தன்னிடம் பணிவாக நடக்காத வடகொரிய பாதுகாப்பு அமைச்சர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தென் கொரிய உளவுத் துறை அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜோங்கிடம் பணிவாக நடக்காததால் வடகொரிய பாதுகாப்பு அமைச்சருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதாகவும், விமானங்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கியால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் அவருக்கு இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் தலைமையேற்று நடத்திய பேரணி ஒன்றில் அதிபர் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சர் தூங்கியதாகவும் அதனால் அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதாக தென்கொரிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிபர் பேரணியில் தூங்கியது தேசத்துரோகத்திற்கு சமம் என்பதால் இந்த தண்டனை அவருக்கு அளிக்கப்பட்டதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.