ஜப்பானை ஒரே நொடியில் சாம்பலாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா. அதிர்ச்சி தகவல்
தென்கொரியா நாட்டிற்கு மட்டுமின்றி உலகையே அச்சுறுத்தி வரும் வடகொரியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டுகள் பரிசோதனை செய்ததால் ஐ.நா, அந்நாட்டின் மீது பொருளாதார நடவடிக்கையை எடுத்தது. இருப்பினும் வடகொரியாவின் கொட்டம் அடங்கவில்லை. தற்போது மீண்டும் சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை பரிசோதனை செய்துள்ளதால் அமெரிக்கா உள்பட உலகநாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளது.
வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த தடைகளை கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் செல்லும் அணுஆயுத ஏவுகணைகளை சமீபத்தில் பரிசோதனை செய்ததாக தகவல்கள் உறுதியாகியுள்ளது. இந்த தகவல்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை வட்டாரங்களூம் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த 18ஆம்ம் தேதி வடகொரியா நேரப்படி காலை 5.55 மணியளவில் ‘ரோடாங்’ ரக ஸ்கட் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்ததாகவும், 800 கிலோ மீட்டர்வரை பாய்ந்துச் சென்று இலக்கை தாக்கிய அந்த ஏவுகணை, ஜப்பானில் உள்ள கிழக்குக் கடல் பகுதியில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து 20 நிமிடங்கள் கழித்து ஏவப்பட்ட மற்றொரு ஏவுகணை அமெரிக்க ரேடார்களின் கண்களில் மண்ணைத்தூவி மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த இரண்டாம் ஏவுகணை எங்கே விழுந்தது என்பதை அமெரிக்காவினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஏவுகணை ஜப்பான் மீது விழுந்தால் அடுத்த நொடியே ஜப்பான் சாம்பலாகிவிடும் என்று கூறப்படுகிறது.
இதனால் வடகொரியா மீது மேலும் ஒருசில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.