அமெரிக்கா, ஜப்பானை குறிவைத்து வடகொரியா ஏவிய ஏவுகணை. அதிர்ச்சி தகவல்
அமெரிக்கா உள்பட பெரிய நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி அணுகுண்டு சோதனைகளை தொடர்ந்து நடத்தி வரும் வடகொரியா சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பானை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை ஒன்றை வெற்றிகரமாக நடத்தியுள்ளது., இதை அமெரிக்க உள்பட பல நாடுகள் மறைமுகமாக ஒப்புக்கொண்டன.
நேற்று வடகொரியா ஏவுகணை விபரங்களை படங்களுடன் வெளியிட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஏவுகணை எப்போது, எங்கிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. நீர்மூழ்கி ஏவுதளத்திலிருந்து மிக வெற்றிகரமாக இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம், அணுகுண்டைத் தாங்கி அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையைப் பெற்றதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் கூறினார் என்று மட்டும் செய்தியாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் சின்போ துறைமுக நகரையொட்டிய கடல் பகுதியில் இருந்த நீர்மூழ்கி ஏவுதளத்திலிருந்து கடந்த புதன்கிழமை செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை ஜப்பான் திசையை நோக்கி 500 கி.மீ. தொலைவு பறந்ததாக தென் கொரிய ராணுவம் உறுதி செய்துள்ளது. ஜப்பான், அமெரிக்காவை அழிக்க ஏவுகணை தயார் செய்துள்ள வடகொரியாவுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்க ஐ.நா. பாதுகாப்புக் குழு தயாராகி வருகிறது.