வடகொரியாவின் முக்கிய ஏவுகணை பரிசோதனை தோல்வி.

வடகொரியாவின் முக்கிய ஏவுகணை பரிசோதனை தோல்வி.

northkoreaஉலகநாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியா, பலமுறை ஏவுகணை சோதனை நடத்தியதால் பொருளாதார தடையை எதிர்நோக்கியுள்ளது. இருப்பினும் அசராமல் மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனை அந்நாடு நடத்தி வரும் நிலையில் நேற்று சக்தி வாய்ந்த முஸுதான் ரக ஏவுகணையை பரிசோதனை செய்தது. ஆனால் இந்த முயற்சி தோல்வியடைந்ததாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தென் கொரியப் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: வட கொரியா தனது முஸுதான் ரக ஏவுகணையை அந்த நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள வோன்ஸான் துறைமுக நகரில் நேற்று காலை 6.40 மணிக்கு பரிசோதனை செய்தது. எனினும் செலுத்தப்பட்ட சில விநாடிகளில் அந்த ஏவுகணை கடலில் விழுந்து நொறுங்கியது. எனவே அந்தப் பரிசோதனை தோல்வியடைந்ததாக நம்பப்படுகிறது என்று கூறினர்.

பசிபிக் பெருங்கடலிலுள்ள குவாம் தீவில் முகாமிடப்பட்டிருக்கும் அமெரிக்க ராணுவ மையங்களை அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததால் அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவ அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த ஏவுகணை தோல்வி அடைந்ததை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனும் உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply