தயார் நிலையில் ஹைட்ரஜன் வெடிகுண்டு. வடகொரியா அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் மற்றும் ஐ.நாவுக்கு கட்டுப்படாமல் வடகொரியா அணு ஆயுத சோதனைகளையும் ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பையும் நடத்தி வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டும் அதை கண்டுகொள்ளாமல், தனது அணு ஆயுத திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வரும் வடகொரியா தற்போது பேரழிவை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. வடகொரிய அதிபரின் இந்த அறிவிப்பு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சமீபத்தில் வடகொரியாவின், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தளம் ஒன்றாஇ பார்வையிட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் -உன், “வடகொரியா ஏற்கெனவே வலிமை வாய்ந்த அணு ஆயுத நாடு. வடகொரியா தனது இறையாண்மையை காத்துக்கொள்வதற்கு அணு குண்டையும், ஹைட்ரஜன் குண்டையும் வெடிக்க தயார்’’ என்று கூறியுள்ளார். இதுகுறித்த தகவல்களை அந்த நாட்டின் அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனம், ‘கே.சி.என்.ஏ.’ நேற்று வெளியிட்டுள்ளது.
அணுகுண்டுகளை விட பேரழிவை ஹைட்ரஜன் குண்டுகள் ஏற்படுத்தும் தன்மை கொண்டது என நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் வடகொரியாவின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. வடகொரியாவின் மீது மேலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உலக நாடுகள் ஒன்றிணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary: North Korea leader says his country has hydrogen bomb, ready to use to protect sovereignty