மக்கள் வெளியேற போட்டி போட்டு தடை செய்யும் மலேசியா-வடகொரியா
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களின் சகோதரர் கிம் ஜோங்-நாம் சமீபத்தில் மலேசியாவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து மலேசிய போலீசாரின் விசாரணை சரியில்லை என்று கருத்து கூறிய வடகொரிய தூதர் மலேசியாவில் இருந்து வெளியேற்றபட்டார். இதற்கு பதிலடியாக வடகொரியாவும் மலேசிய தூதரை வெளியேற்றியது.
இந்நிலையில் வடகொரியாவில் வாழும் மலேசியர்கள் நாட்டை வெளியேற திடீரென வடகொரியா தடை விதித்தது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனையில் பொதுமக்களை தண்டிக்க வேண்டாம் என்று மலேசியாவின் கோரிக்கையை வடகொரியா நிராகரித்தது. இந்நிலையில் மலேசியாவும் அதிரடியாக அங்குள்ள வடகொரியர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்தது.
இருநாடுகளும் பரஸ்பரம் தங்கள் நாட்டில் வாழும் அடுத்த நாட்டு மக்களை கிட்டத்தட்ட சிறை பிடித்துள்ளதால் இந்த பிரச்சனை முற்றிக்கொண்டு வருவதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.