அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: வட கொரியா
தென்கொரியா மற்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வட கொரியா கூறியதாக தென்கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பல ஆண்டு பனிப்போருக்குப் பின், வட கொரியா, தென் கொரியா ஆகிய இருநாடுகளும் தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெறும் வின்டர் ஒலிம்பிக்ஸ்-ல் ஒரே கொடியின் கீழ் அணிவகுத்து வந்தது.
இந்நிலையில், அதன் நிறைவு விழாவில் பங்கேற்க வடகொரிய மூத்த தலைவர்கள், பிரதிநிதிகள் தென்கொரியா வந்துள்ளனர். அவர்கள் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து, இருநாடுகளும் கையோடு, கைகோர்த்து செயல்பட பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததாக புளூஹவுஸ் அறிக்கை கூறியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகொரியா-தென்கொரியா மட்டுமின்றி அமெரிக்காவுடனும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம் என வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மூன் ஜே இன் உடனான வடகொரிய பிரதிநிதிகள் சந்திப்பு எந்த இடத்தில் நடந்தது என தெரிவிக்கப்படவில்லை.