அமெரிக்கா முழுவதையுமே தாக்கும் வல்லமை வடகொரியாவுக்கு உண்டா?
அமெரிக்கா முழுவதையுமே தாக்கும் வல்லமை படைத்த நாடாக வடகொரியா மாறியுள்ளது.
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தியது. ஹாவசாங்-14 என்ற பெயர் கொண்ட இந்த ஏவுகணை, 3,724.9 கிமீ உயரமாக எழும்பி, 998 கிமீ தூரம் பயணித்து கொரிய தீபகற்பத்தின் கிழக்கே கடலில் விழுந்துள்ளது.
இதனை அந்நாட்டு அதிபர் கிம், நேரில் பார்வையிட்டார். இதன் பாதிப்பு அதிகம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளுடம் தீவிர ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.