தூதர்களை திடீரென திரும்ப அழைக்கும் வடகொரியா! முக்கிய ஆலோசனை
வடகொரியா, அமெரிக்கா இடையே போர் ஏற்படும் சூழல் இருந்து வரும் நிலையில் இன்று காலை வடகொரியா திடீரென ரஷ்யா, பிரிட்டன் மற்றும் சீன நாடுகளின் தனது தூதர்களை வடகொரியாவுக்கு திரும்ப அழைத்துள்ளது.
போர் மேகம் குறித்து இந்த மூன்று தூதர்களிடமும் வடகொரிய அதிபர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகவும், இந்த ஆலோசனைக்கு பின்னர் வடகொரியா அதிரடி முடிவை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
வடகொரியாவுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. ஆனால் வடகொரியா முதலில் தாக்குதல் நடத்தினால் தொடர்ந்து இந்த இரு நாடுகளும் ஆதரவு தருமா? என்பது கேள்விக்குறிதான். அதே நேரத்தில் அமெரிக்கா முதலில் தாக்குதல் நடத்தினால் இந்த இரு நாடுகளும் வடகொரியாவுக்கு முழு ஆதரவு கொடுக்கும் என்று கருதப்படுகிறது