தென்கொரிய அதிபர் சகோதரரை கொலை செய்தது ஒரு பெண்ணா?
அமெரிக்கா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்- அவர்களின் சகோதரர் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணையை அடுத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வியட்நாமை சேர்ந்த பாஸ்போர்ட் இருந்தாலும், அவர் உண்மையில் எந்த நாட்டவர் என்ற விசாரணை நடந்து வருகிறது.
அணு ஆயுதங்களுடன் கூடிய கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளை அவ்வப்போது ஏவி, அமெரிக்கா உள்பட உலக நாடுகளின் கண்டனங்களை பெற்று வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த மலேசிய போலீசார் வியட்நாம் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேர்களை மலேசிய போலீசார் தேடி வருவதாகவும், வெளிநாட்டை சேர்ந்த சதிக்கும்பல் இந்த கொலையை செய்ய காரணமாக இருந்ததாகவும், இன்னும் சில நாட்களில் இந்த கொலைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.