அமெரிக்க தேர்தலுக்கு மேலும் ஒரு சோதனை. ஏவுகணை வீச வடகொரியா திட்டமா?
தேர்தல் நாள் அன்று ஐ.எஸ். இயக்கத்தினர் அமெரிக்காவில் கடுமையான தாக்குதலை நடத்தக்கூடும் என ஏற்கனவே அமெரிக்க புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் நாள் அன்று தென்கொரியா மீது ஏவுகணை வீச வடகொரியா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை தென்கொரியாவும் உறுதி செய்துள்ளது.
தென்கொரியாவுக்கு முழுஅளவில் ஆதரவு கொடுத்து வரும் அமெரிக்காவிற்கு பாடம் கற்பிக்கவே அன்றைய தினம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
3,000 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய மசூடன் ஏவுகணையை வடகொரியா ஏவக்கூடும் என்று கூறப்பட்டது. அந்த ஏவுகணை அமெரிக்காவின் குவாம் மாநிலம் வரை செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது..