வடகொரியாவில் ஆட்சியை எதிர்த்து விமர்சனம் செய்த துணை பிரதமருக்கு மரண தண்டனையா?

வடகொரியாவில் ஆட்சியை எதிர்த்து விமர்சனம் செய்த துணை பிரதமருக்கு மரண தண்டனையா?

north koreaவட கொரியாவில் தற்போது ஆட்சி செய்து வரும் கிம் ஜாங் அன் அவர்களின் கொள்கைகள் ஏமாற்றம் அளிப்பதாக துணைப்பிரதமர் சூ யாங் கான் கடுமையாக விமர்சித்து குரல் கொடுத்ததால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அவர் கடந்த மே மாதமே, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும் திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு துணை பிரதமராக பதவியேற்ற 63 வயது சூ யாங் கான், அதிபர் கிம் ஜாங் அன் அவர்களின் கொள்கைகளையும், ஆட்சி முறையையும் கடுமையாக விமர்சனம் செய்ததாகவும், இதனால் அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு, அந்த தண்டனையை கடந்த மே மாதமே நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கிம் ஜாங் அன் கலந்து கொண்ட ராணுவ அணிவகுப்பு ஒன்றில் ராணுவ அமைச்சர் ஹயான் யாங் சோல், தூங்கினார் என்ற குற்றத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்திகள் வெளிவந்தது. தற்போது துணைப்பிரதமரும் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்துள்ளதால், இந்த ஆண்டு மட்டும் இரண்டு தலைவர்கள் வடகொரியாவில் சுட்டுக்கொல்லப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Leave a Reply