நார்த் சவுத் பவுண்டேஷன் (என்.எஸ்.எப்.,) முதலாம் ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்க தகுதி:
பத்தாம் மற்றும் 12ம் வகுப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 10 சதவீத மாணவ, மாணவியர். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.80,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும். அரசு கல்லூரி அல்லது அரசு உதவி பெறும் கல்லூரியில், பொறியியல், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., கால்நடை, பி.பார்ம்., பி.எஸ்சி. வேளாண்மை அல்லது பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: ஆண்டுக்கு ரூ.5,000 – 15,000ம் வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 30
மேலும் விவரங்களுக்கு: www.northsouth.org