களி, சப்பாத்தி, சாம்பார். சிறையில் சசிகலாவின் சாப்பாடு

களி, சப்பாத்தி, சாம்பார். சிறையில் சசிகலாவின் சாப்பாடு

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நேற்று முன் தினம் வெளிவந்தபோது அதில் சசிகலாவுக்கு நான்கு வருட தண்டனை உறுதி செய்யப்பட்டதால் நேற்று முதல் அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சிறை நிர்வாகம் சிறப்பு வசதிகள் செய்து தர மறுப்பு தெரிவித்துவிட்டதால் சிறையில் அவருக்கு மற்ற கைதிகளுக்கு கிடைக்கும் சலுகைகளும், உணவும் மட்டுமே வழங்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளது.

சசிகலாவுக்கு காலை 7 மணிக்கு 2 சப்பாத்தி, சாம்பார் மற்றும் காபி வழங்கப்படுவதாகவும், பகல் 11 மணிக்கு 400 கிராம் சாதம், 400 கிராம் கேழ்வரகு களி உருண்டையுடன் சாம்பார் வழங்கப்படுவதாகவும், பின்னர்  மாலை 5 மணிக்கு கலவை சாதம் மட்டும் வழங்கப்படுவதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் அவருக்கு தனியாக ஒரு போர்வையும் வழங்கப்படும்.சசிகலாவுக்கு சிறையில் கைதி எண் 9,234 மற்றும் இளவரசிக்கு கைதி எண் 9,235 ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சசிகலாவின் வேண்டுகோளின்படி இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply