மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளுக்கு தடையில்லை. மே.வங்க முதல்வர் மம்தா அதிரடி அறிவிப்பு

mamthaதமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்கள் மேகி நூடுல்ஸுக்கு தடை விதித்துள்ளதை அடுத்து மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளுக்கு தடை விதிக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ரசாயன பொருட்கள் கலந்திருப்பதால் தடை விதிக்கப்படுவதாக டெல்லி, கேரளா, தமிழ்நாடு, காஷ்மீர், தெலுங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்கள் அறிவித்திருக்கும் நிலையில் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்று மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி அதிரடியாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றார்.

மேற்குவங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் எந்த ஆபத்தும் இல்லை என்று கண்டறியப்பட்டதாகவும்,  எந்த ஆபத்தும் இல்லாத மேகி நூடுல்ஸுக்கு எப்படி தடை விதிக்க முடியும் என்று கூறிய மம்தா, தேவைப்பட்டால் மறு ஆய்வுக்கு அனுப்புவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, மேற்குவங்கத்தில் மேஜி நூடுல்ஸ்க்கு தடை விதிக்கப்படவில்லை. இதனால், அங்கு தாராளமாக மேகி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், மம்தாவின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave a Reply