சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற திருநங்கைக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மேயர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில், ராய்கர் மாநகராட்சியில் முதல்முறையாக மது கிண்ணார் என்ற திருநங்கை வெற்றி பெற்றார். அவர் . ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை விட சுமார் 4 ஆயிரத்து 537 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
35 வயதான திருநங்கை மது கிண்ணார், தனது மேயர் தேர்தல் பிரசாரத்திற்காக வெறும் 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்ததாகவும், அவரை தோற்கடிக்க ஆளுங்கட்சி பல லட்சங்கள் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தன் மீது நம்பிக்கை வைத்து மேயர் தேர்தலில் வெற்றியை தேடித்தந்த ராய்கர் மாநகர மக்களுக்காக தான் பாடுபடப் போவதாக மேயர் மது கிண்ணார் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.