தபால் நிலையங்களில் செல்போன், பிரிட்ஜ் விற்பனை. பொதுமக்கள் வரவேற்பு.

IMG_5346தபால் நிலையங்களில் தற்போது வருமானம் குறைய ஆரம்பித்துவிட்டதால் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாக தபால் நிலையங்கள் மாறி வருகின்றன.

சமீபத்தில் தபால் நிலையங்களில் செல்போன் விற்பனைப்பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இங்கு விற்பனை செய்யப்படும் செல்போனில் விலை ரூ.1999/- மட்டுமே. இரண்டு சிம்கார்டுகள் பொருத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாலௌம், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ‘பிரீபெய்ட் சிம்’, 2 ஆயிரம் நிமிட இலவச ‘டாக்-டைம்’ உடன் தரப்படுவதாலும் இந்த செல்போனை அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். விற்பனை ஆரம்பிக்கப்பட்ட ஒரே மாதத்திற்குள்  4,800-க்கும் அதிகமான செல்போன்கள் இதுவரை விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

செல்போன்கள் மட்டுமின்றி  தபால் நிலையங்களில் பிரிட்ஜ் மற்றும் சூரியமின்சக்தி விளக்குகளும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ரூ.5300 முதல் ரூ.6,000 வரையிலான விலைகளில் இங்கு விற்கப்படும் பிரிட்ஜ்கள் தரமுள்ளதாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் பலர் இந்த பிரிட்ஜ்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதுதவிர அண்ணா பல்கலைக் கழகம், ஐஐடி, சென்னைப் பல் கலைக்கழகம் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் அங்கு பயிலும் வெளியூர் மாண வர்களின் புத்தகங்களை ‘பேக்’ செய்து அவர்களது வீடுகளுக்குப் பாதுகாப்பாக அனுப்புவதற்காக, சிறப்பு முகாம்கள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply