கேள்வி கேட்கும் ரோபோக்கள். அமெரிக்க விஞ்ஞானிகளின் சாதனை
பொதுவாக ரோபோக்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் புரோகிராம் படிதான் வேலை செய்யும். ஆனால் முதல்முறையாக தனது சந்தேகங்களை புத்திசாலிதனமான கேள்விகளாக கேட்கும் ரோபோக்களை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை செய்துள்ளனர்.
முக்கிய பணிகளில் அமர்த்தப்படும் ரோபோக்களுக்கு திடீரென அந்த பணியில் சந்தேகம் ஏற்பட்டால் அதை கேள்வியாக கேட்டு பதிலை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும் புதிய வகை ஸ்மார்ட் ரோபோக்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. அதன்மூலம் ‘ரோபா’க்களின் செயல்பாடுகளின் திறன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.