மோடி டீ விற்ற இடங்களை சுற்றி பார்க்க குஜராத் சுற்றுலா கழகம் புதிய திட்டம்.

modi teaசாதாரண டீக்கடையில் வேலை பார்த்த நரேந்திர மோடி தற்போது பிரதமராக பதவியேற்றுள்ளார். தற்போது அவர் பிறந்த வீடு, அவர் டீ விற்ற ரெயில் நிலையம் ஆகியவை குஜராத்தின் பிரபல சுற்றுலா தளங்களாக மாறி வருகிறது.

குஜராத் சுற்றுலா வளர்ச்சி கழகம் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஒரு சுற்றுலா திட்டத்தில் 600 ரூபாய் செலுத்தினால் மோடியின் பூர்வீக பூமியான வாட்நகருக்கு சென்று வரலாம். இத்திட்டத்திற்கு “மோடியின் கிராமத்தில் இருந்து ஒரு எழுச்சி” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் மற்றும் காந்தி நகரில் இருந்து ஆரம்பமாகும் இந்த பயணம் மோடியின் மூதாதையர் வீடு, அவர் படித்த தொடக்கப்பள்ளி, மேடை நாடகங்களில் கலந்து கொண்ட உயர்நிலை பள்ளி, அவர் வேலைபார்த்த டீக்கடை, அவர் டீ விற்ற ரயில் நிலையம் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியும்.

மோடியை பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் அவருடைய பள்ளி நண்பர்களுடன் நேரடியாக பேசுவதற்கும் இந்த அமைப்பு ஏற்பாடு செய்து தருகிறது. மேலும்
சாதரண டீ விற்கும் சிறுவன் எப்படி இந்திய நாட்டின் அதிகாரம் மிக்க பிரதமர் பதவியை அடைந்தார் என்பதை தெரிந்துகொள்ள சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் என குஜராத் சுற்றுலா கழகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளளது

Leave a Reply