இந்திய தேசிய பங்குச்சந்தை வழங்கும் சந்தை மூல தன படிப்பு

nse

இந்தியாவின் இரண்டாவது மிக முக்கியமான பங்குச் சந்தை, இந்திய தேசிய பங்குச் சந்தை (NSE).  தற்போது இந்தியாவின் மத்திய பகுதியில் மாணவர்களிடையே சந்தை முதலீட்டு பற்றி கல்வியை ஊக்குவித்து வருகின்றது

என்.எஸ்.சி.,யானது மத்தியப் பிரிதேசத்தில் உள்ள மிகப் பெரிய கல்லூரியான ஐபிஎஸ் அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இது கூடுதலாக மத்திய இந்தியாவின் 14 நிறுவனங்களுடன் ஒன்றிணைந்துள்ளது. மாணவர்களுக்கு வகுப்பறையில் நவீன ஆன்லைன் மயமாக்கப்பட்ட பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. இது முதலில் 500 மாணவர்களை என்எஸ்இ சான்றளிக்கப்பட்ட சந்தை முதலீட்டு நிபுணத்துவ தேர்வுக்கு ஈடுபடுத்த உள்ளது.

சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை, சந்தையியல், மூலதனம் பற்றி பல்வேறு படிப்புகளை வழங்கி வருவதோடு, மாணவர்களிடையே சந்தையியல் பற்றி ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.

சந்தை மூலதனம் பற்றி விரிவாக அறிய http://www.nseindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply