உள்நாட்டிலேயே தயாரான தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி.

dhanushஅணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனுஷ் என்ற ஏவுகணையை நேற்று இந்தியா வெற்றிகரமாக ஏவி சாதனை புரிந்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பின்  விஞ்ஞானி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “ஒடிஸா மாநிலம், பாலாசோர் நகரில் வங்கக் கடல் எல்லை அருகே  தனுஷ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டதாகவும், சுமார் 500 கிலோ எடைகொண்ட இந்த ஏவுகணை அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக அடைந்து தாக்கும் என்றும் கூறினார்.

மேலும் டி.ஆர்.டி.ஓ. மையத்தில் முற்றிலும் உள்நாட்டின் உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை இரண்டாவது முறையாக ஏவப்படுகிறது என்றும், முதல்முறையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தனுஷ் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக வெற்றிகரமாக செலுத்தப்பட்ட உடனேயே தனுஷ் ஏவுகணை இந்திய ராணுவத்தில் ஏற்கனவே  இணைக்கப்பட்டதாகவும், இந்த இரண்டாவது சோதனை ஒரு வழக்கமான சோதனைதான் என்றும் அவர் தெரிவித்தர்.

Leave a Reply