அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மனைவி நிர்வாண போஸ் கொடுத்தவரா? பரபரப்பு தகவல்
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை டொனால்ட் டிரம்ப் ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது அவருடைய மனைவி மெலினியாவும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். முன்னாள் மாடல் அழகியான இவர் டொனால்டை காதலித்து அவருக்கு மூன்றாவது மனைவியாகியுள்ளார்.
இந்த நிலையில், மெலினியா மாடலிங் தொழிலில் கொடிகட்டி பறந்தபோது 1990-ம் ஆண்டில் நிர்வாணமாக ‘போஸ்’ ஒன்றை கொடுத்திருந்தார். அப்போது இந்த போஸ் யாராலும் கவனிக்கப்படாத நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு நிர்வாண கோலத்தில் அவரது பல்வேறு புகைப்படங்களையும், இன்னொரு பெண்ணுடன் கட்டியணைத்தபடி கட்டிலில் படுத்திருக்கும் வேறு சில புகைப்படங்களையும் அமெரிக்காவின் பிரபல நாளிதழான ‘தி நியூயார்க் போஸ்ட்’ இன்று வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நிர்வாண அழகியின் கணவரா அடுத்த அதிபர்? என்றும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து டொனால்ட் கூறியபோது இதுபோன்ற பல நிர்வாண போஸ்களை மெலினியா கொடுத்துள்ளது தனக்கு முன்பே தெரியும் என்றும் இதை பெரிதுபடுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்றும் அமெரிக்காவின் எதிர்காலம் குறித்து பிரச்சாரம் செய்யுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.