தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடியை வழங்கினார் ஓபிஎஸ்
ஒலிம்பிக் போட்டி வெள்ளி வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு தெலுங்கானா, ஆந்திரா மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு கோடிக்கணக்கில் பரிசுகளை அள்ளி அள்ளி கொடுத்தது. ஆனால் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ரூ.75 லட்சம் மட்டுமே பரிசு அறிவித்தது. ஆனால் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மாரியப்பனுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா அறிவித்த அந்த ரூ.2 கோடியை இன்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாரியப்பனுக்கு வழங்கினார்., இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராஜேந்திர குமார், த. மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா ஆகியோர் உடனிருந்தனர