ஐ.எஸ் இயக்கத்தின் நிறுவனர் ஒபாமா. துணை நிறுவனர் ஹிலாரி. டொனால்ட் சர்ச்சை பேச்சு

ஐ.எஸ் இயக்கத்தின் நிறுவனர் ஒபாமா. துணை நிறுவனர் ஹிலாரி. டொனால்ட் சர்ச்சை பேச்சு

donaldஅமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். ஹிலாரி அமைதியான முறையிலும், டொனால்ட் ஆர்ப்பாட்டமான முறையிலும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஹிலாரி கிளிண்டனே அடுத்த அதிபர் என்று கருத்து தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஹிலாரியையும், தற்போதைய அதிபர் ஒபாமாவையும் டொனால்ட் டிரம்ப் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் ஒபாமாவையும் ஹிலாரியையும் அவர் ஒப்பிட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று புளோரிடோ மாகாணத்தில் நடைபெற்ற ஒரு பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது: ,“அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாதான் ஐ.எஸ் அமைப்பை நிறுவியவர். ஹிலாரி கிளிண்டன் ஐ.எஸ் அமைப்பின் துணை நிறுவனர் ஆவார். கடந்த திங்கட்கிழமை ஃபுளோரிடாவில் நடந்த ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஆர்லாண்டோ துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவரின் தந்தையும் கலந்து கொண்டுள்ளார். அவரும் ஹிலாரியை போன்றவர்தான். மேலும் ஓபாமாவால் தான் ஐ.எஸ் அமைப்பு தெற்கு ஆசிய பகுதிகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு பரவியது” என்று கடுமையாக தாக்கி பேசினார்.

Leave a Reply