அமெரிக்காவின் நீதிபதியாக இந்தியரை நியமனம் செய்த ஒபாமா
சர்வதேச அளவில் இந்தியர்கள் மிகப்பெரிய பதவிகளை அடைந்து நாட்டிற்கு பெருமை தேடி தந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொரு இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கலிபோர்னியா மாகாணத்தின் பே என்ற பகுதியில் உள்ள மத்திய நீதிமன்றத்தின் 14 நீதிபதிகளில் 11 பேரை இடம் மாற்றம் செய்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இதனால் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்தது. அந்த ஒப்புதலின்படி தற்போது 11 நீதிபதிகள் முழு நேர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வின்ஸ் சாப்ரியா என்ற 46 வயது அமெரிக்க இந்தியரும் அடங்குவார்.
வின்ஸ் சாப்ரியா தான் பே பகுதி என்று குறிப்பிடபடும் சான் பிரான்சிஸ்கோவின் மத்திய நீதிபதியாக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது