ஒபாமாவின் பிளாக்பெர்ரி போனுக்கு தடை.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஒபாமா பயன்படுத்தி வரும் பிளாக்பெர்ரி போனில் இருந்து பத்து பேர்களிடம் மட்டுமே அவர் பேச முடியும் என்றும் வேறு நபர்களிடம் பேச வேண்டும் என்றால் அவர் வேறு போனில்தான் பேச வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிளாக்பெர்ரி போன் ஒருகாலத்தில் அனைத்து விஐபிக்களும் விரும்பி வாங்கப்பட்ட நிலையில் தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காகவும், ஐபோன் போன்ற வசதி அதிகமுள்ள போன்கள் வெளிவந்துவிட்டதாலும் பலர் வேறு போன்களுக்கு மாறிவிட்டனர்.
ஆனால் ஒபாமா அதிபர் ஆவதற்கு முன்பிருந்தே அதாவது 2008ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வரும் பிளாக்பெர்ரி போனில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் செக்யூர் வாய்ஸ்’ என்ற புதிய மென்பொருளை புகுத்தியுள்ளனர். இதனால் இந்த போனில் இருந்து ஒபாமா, அவரது மனைவி மிச்செலி ஒபாமா, துணை அதிபர் ஜோபிடன் மற்றும் ஒபாமாவின் தலைமை அதிகாரி, செய்திதுறை செயலாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என 10 பேரிடம் மட்டுமே பேச முடியும். இவர்களை தவிர வேறு யாரிடமும் பேச முடியாது, குறுந்தகவல்கள் அனுப்ப முடியாது, பாடல், இசையை கேட்க முடியாது, செல்பியோ, போட்டோவோ எடுக்க முடியாது. தனது பிளாக்பெர்ரி செல்போனை ஒரு விளையாட்டு பொருள் போன்று பாவித்து வருவதாக நகைச்சுவையுடன் ஒபாமாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.